×

திமுக செய்த திட்டங்களை கூறி அமைச்சர் பெரியகருப்பன் பிரசாரம்

 

 

திருப்புத்தூர், ஏப்.6: திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளரும், அமைச்சருமான கேஆர்.பெரியகருப்பன் 5வது முறையாக திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார். நான்கு முறை வெற்றி பெற்ற அமைச்சர் பெரியகருப்பன் இரண்டு முறை அமைச்சராகவும், இரண்டு முறை எம்எல்ஏ ஆகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் 5வது முறையாக திருப்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பெரியகருப்பன் பிள்ளையார்பட்டியில் சாமி தரிசனம் செய்து விட்டு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பிரசாரத்தை துவங்கினார்.
தொடர்ந்து பிள்ளையார்பட்டி ஆதிதிராவிடர் காலனி, உடையார் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் மக்களுக்கு செய்துள்ள எண்ணற்ற பயனுள்ள திட்டங்களை எடுத்துக்கூறி பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
இந்த பிரசாரத்தில், திமுக மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கே.எஸ்.ரவி, திமுக மாவட்ட பிரதிநிதி பிள்ளையார்பட்டி வெள்ளைச்சாமி, முன்னாள் திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய துணைச் சேர்மன் மீனாள், ஒன்றிய செயலாளர்கள் சண்முகவடிவேல், விராமதி மாணிக்கம், ஒன்றிய துணைச் செயலாளர் எம்ஆர்சி.இளங்கோவன், ஒன்றிய பொருளாளர் கண்ணன், இளைஞர் அணியைச் சேர்ந்த பிள்ளையார்பட்டி சதீஷ்குமார், ஊராட்சி செயலாளர்கள் சண்முருகேசன், சுப்பிரமணியன், திருப்புத்தூர் வட்டார காங்கிரஸ் தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Tags : Minister ,Peryakarappan ,Dimuka ,Tiruptuthur ,Tiruptudur Assembly Constituency ,Peryakarapan ,Tiruptuur Assembly Constituency ,
× RELATED காங்கயத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் தேர்தல் விழிப்புணர்வு பேரணி