×

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா தீவிர வாக்கு சேகரிப்பு

 

 

திருப்பரங்குன்றம், ஏப். 6: திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக வி.வி.ராஜன் செல்லப்பா போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்த ராஜன் செல்லப்பாவை ஆதரித்து நடிகை விந்தியா நேற்று அவனியாபுரம் மந்தை திடலில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் ராஜன் செல்லப்பா மதுரை பெற்ற பிள்ளை. நிச்சயம் மறுபடியும் உங்கள் ஆதரவுடன் ஜெயிப்பார். உங்களுக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்து திருப்பரங்குன்றத்தை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றுவார். இவ்வாறு பேசினார். தொடர்ந்து வேட்பாளர் ராஜன் செல்லப்பா, வாக்காளர்களிடம் அதிமுக பொது செயலாளர் பழனிசாமி அளித்த தேர்தல் வாக்குறுதிகளை மேற்கோள் காட்டி வாக்கு சேகரித்தார். ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.10 ஆயிரம், குளிர்சாதன பெட்டி, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை வாக்காளர்களுக்கு எடுத்து கூறி வாக்கு சேகரித்தார்.

Tags : Thiruparankundram ,AIADMK ,Rajan Chellappa ,V.V. Rajan Chellappa ,Actress ,Vindhya ,Avaniyapuram Mandai Thidal ,
× RELATED காங்கயத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் தேர்தல் விழிப்புணர்வு பேரணி