மானாமதுரை, ஏப்.6: வேட்பு மனுத்தாக்கல் இன்று கடைசி நாள் என்பதால் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வந்து வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யுமாறு தேர்தல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 30ம் தேதி துவங்கியது. இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமான கட்சியினர் மனுத்தாக்கல் செய்வதில் மும்முரமாக உள்ளனர்.
இறுதிநாள் என்பதால் அ்ங்கிகரிக்கப்பட்ட கட்சிகள், சுயேட்சைகள் என பலரும் அலுவலக நேரத்தில் ஒரே இடத்திற்கு வந்தால் மனுக்களை பெறுவது, சரிபார்ப்பது என தேர்தல் பிரிவு அலுவலர்களுக்கு சிரமம் ஏற்படுவதுடன் வேட்பாளர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட வாய்ப்புள்ளது என தேர்தல் ஆணையம் கருதுகிறது. எனவே இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்பவர்கள், மாற்றுவேட்பாளர்கள் தங்களுடன் வரும் பிரதிநிதிகள் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை சரிபார்த்து தயாராக கொண்டு வரவேண்டும் என்றும், ஒரே நேரத்தில் வேட்பாளர்கள் உள்ளே வரும் பட்சத்தில் ஏதேனும் பிரச்னை வராமல் இருக்க தேர்தல் நடத்தும் அலுவலர்கள் டோக்கன் முறையை ஏற்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்
ளது.
மேலும் மாலை அலுவலகப் பணி முடியும் நேரத்திற்குள் வளாகத்திற்குள் வந்த வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கும் வகையில் காத்திருப்போர் அறையில் அமர வைத்து பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் மனுக்களை பெறவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
