×

கம்பத்தில் உள்ள உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு

 

கம்பம், ஏப்.6: சிலிண்டர்களை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கம்பம் பகுதியில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்களில் அதிக விலைக்கு உணவுப் பொருட்கள் விற்பனையாவதாக தினகரன் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதனையடுத்து, தேனி மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகுமார் தலைமையில் உத்தமபாளையம் வட்ட வழங்கல் அதிகாரி மோகன் முனியாண்டி, கம்பம் மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளான கே.கே பட்டி, சுருளிப்பட்டி, மற்றும் உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்களில் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் வணிகப் பயன்பாட்டிற்கு பயன்படும் காஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைத்து கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தனர்.
இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது: காஸ் தட்டுப்பாட்டை காரணம் காட்டி கள்ளச்சந்தையில் சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரம் உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு கட்டாயம் கடை பெயர் மற்றும் தேதியுடன் பில்கள் வழங்கப்பட வேண்டும். மேலும் அத்தியாவசியமான உணவுப் பொருட்களின் விலையை காரணமின்றி உயர்த்த கூடாது. மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags : Cumbum ,Dinakaran ,
× RELATED காங்கயத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் தேர்தல் விழிப்புணர்வு பேரணி