×

பாதுகாப்பற்ற நீர் நிலைகளுக்கு மாணவர்கள் செல்வதை பெற்றோர் தடுக்க வேண்டும்

 

திண்டுக்கல், ஏப். 6: திண்டுக்கல் மாவட்டத்தில், கோடை விடுமுறை வர இருக்கும் நிலையில், சிறுவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பாதுகாப்பற்ற நீர் நிலைகளில் குளிப்பதையும், பாழடைந்த கிணறுகள், கைவிடப்பட்ட கல்குவாரிகள், ஆற்றுப்பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர், ஏரி, குளம், குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைப் பகுதிகளில், அதன் ஆழம் அறியாமல் துணி துவைக்கவும், குளிக்கவும் செல்வதை தவிர்க்க வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர் இதுகுறித்து அறிவுறுத்தி, தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு குளிக்க செல்லாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்.
மேலும், இதுபோன்ற நீர்நிலைகள் இருக்கும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் பகுதியில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதனையும் மீறி ஏதேனும், அசம்பாவிதம் ஏற்பட்டால், அதுகுறித்து உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சிறுவர்கள், பள்ளி மாணவ, மாணவிகளின் தேவையற்ற நடவடிக்கைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் சரவணன் கூறியுள்ளார்.

Tags : Dindigul ,
× RELATED காங்கயத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் தேர்தல் விழிப்புணர்வு பேரணி