நத்தம், ஏப். 6: நத்தம் அருகே சேர்வீடு கிராமத்தில் வேட்டைக்காரன் சுவாமி கோயில் திருவிழா நடந்தது. இதையொட்டி மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகளுடன் வேட்டைக்காரன் சுவாமி மற்றும் குதிரை, மதலை சிலைகள் செய்யப்பட்ட நிலையில் நத்தத்தில் செந்துறை பிரிவு பகுதிக்கு சென்றடைந்தது. அங்கு சுவாமிக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்ற பிறகு மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் வேட்டைக்காரன் சுவாமி நகர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பக்தர்கள் வழிநெடுகிலும் காத்திருந்து சுவாமிக்கு வேஷ்டி, வண்ண மலர் மாலைகள் சூட்டி சிறப்பு பூஜைகள் நடத்தினர். இந்த ஊர்வலம் மாரியம்மன் கோயில், பெரியகடை வீதி, மார்க்கெட் வீதி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக, முடிவில் சேர்வீட்டிலுள்ள கோயிலை சென்றடைந்தது.
