பாலக்காட்டில் மாதிரி பசுமை வாக்குச்சாவடி

 

பாலக்காடு, ஏப். 6: பாலக்காடு மாவட்டத்தில் உள்ள 12 சட்டமன்ற தொகுதிகள் உள்பட கேரளம் மாநிலத்தில் உள்ள 140 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 9ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி பாலக்காடு அரசு அலுவலகங்கள் உள்ள ஒருங்கிணைந்த வளாகத்தில் ஷொர்ணூர் நகராட்சியால் மாதிரி பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி வாக்குச்சாவடியை சப்-கலெக்டர் ரவி மீனா நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
இந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு தேவையான குடி நீர், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான சாய்வுத்தளம், நடக்க முடியாத வாக்காளர்களை அழைத்து வரும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பசுமை விதிமுறைகளை வாக்காளர்கள் கடைபிடிக்க வேண்டும். இயற்கை சுற்றுச்சூழலை பாதிப்பில்லாமல் மக்கள் காத்திட வேண்டும் என இந்த பசுமை வாக்குச்சாவடி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

Related Stories: