கோவை மாநகராட்சியில் ரூ.472 கோடி சொத்து வரி வசூல்

 

கோவை, ஏப்.6: கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 100 வார்டுகள் இருக்கிறது. இதில் வீடு, வணிக நிறுவனங்கள் என பல லட்சம் சொத்து வரி விதிப்புகள் இருக்கிறது.
சொத்து, தொழில் வரியாக ஆண்டுதோறும் மாநகராட்சி சார்பில் வரி வசூல் பணி நடத்தப்பட்டு வருகிறது. 2025-26-ம் நிதியாண்டில் ரூ.665 கோடி வரி வசூல் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 530.15 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. நிலுவையாக ரூ. 135 கோடி என ரூ. 665 கோடி இலக்கு வைக்கப்பட்டிருந்தது. இதன்படி வரி வசூல் நடந்தது.
மத்திய மண்டலம் ரூ. 151 கோடியும், கிழக்கு மண்டலம் ரூ. 112 கோடியும், வடக்கு மண்டலம் ரூ.89 கோடியும், மேற்கு மண்டலம் ரூ. 70 கோடி மற்றும் தெற்கு மண்டலம் ரூ. 50 கோடியும் வசூலித்துள்ளது. மொத்தமாக 472 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டது. இதில் 114 சொத்துவரி உரிமையாளர்கள் நீதிமன்ற வழக்குகள் காரணமாக சொத்து வரி செலுத்தமாமல் உள்ளனர்.

Related Stories: