பெ.நா.பாளையம், ஏப்.5: கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள வடக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. நாம் தமிழர் கட்சியின் ஹேமலதா என்பவர் மாற்று வேட்பாளராகவும், மக்கள் உரிமை கட்சி தாமரைக்கண்ணன், தமிழக வெற்றி கழகத்தினுடைய வேட்பாளர் கனிமொழி சந்தோஷ், அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் மல்லிகா, மற்றும் 7 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 11 பேர் வேட்பமான தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 14 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
