மணப்பாறை அருகே டூவீலரில் எடுத்து வந்த ரூ.69,000 பறிமுதல்

மணப்பாறை, ஏப். 5: மணப்பாறை அருகே டூவீலரில் எடுத்து வந்த ரூ. 69,000 ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிரடியாக பறிமுதல் செய்தனர். சட்ட மன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு நடைமுறையில் உள்ள தேர்தல் நன்னடத்தை விதிகளை தொடர்ந்து மணப்பாறை சட்டப்பேரவை தொகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர்.

அப்போது நேற்று மாலை பிள்ளையார் கோவில்பட்டி பகுதியில் பறக்கும்படை அலுவலர் கண்ணன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையின் போது, டூவீலரில் உரிய ஆவணங்களின்றி தொப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த பொம்மநாயக்கர் மகன் திருப்பதி எடுத்து வந்த ரூ.69,000 ரொக்க பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மணப்பாறை தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

கைப்பற்றப்பட்ட தொகையினை மேல்முறையீட்டு குழுவிடமிருந்து உரிய ஆணை பிறப்பிக்கப்படும் வரை பறிமுதல் தொகை அடங்கிய கட்டினை பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு மணப்பாறை சார்நிலை கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

 

 

Related Stories: