ஏழைகள் பயன்பெறக்கூடாது என்பதற்காக கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி: திமுக எம்.பி. வில்சன்!

 

சென்னை: ஏழைகள் பயன்பெறக்கூடாது என்பதற்காக கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி. வில்சன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது; உரிய காலத்தில் உரிமம் புதுப்பிக்கவில்லை என்றால் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள் உரிமம் ரத்தாக வாய்ப்புள்ளது. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி, நிறுவனங்கள் மருத்துவமனைகளின் உரிமங்கள் பறிபோகும் ஆபத்து. எந்த காரணமும் இன்றி சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய முடியும்.

FCRA சட்டம் மூலம் சிறுபான்மையினர் நிறுவனங்களை அபகரிக்க மோடி அரசு முயற்சிக்கிறது. FCRA சட்டத்திருத்தம் குரூரமானது என திமுக எம்.பி. வில்சன் கண்டனம். ஏழைகள் பயன்பெறக்கூடாது என்பதற்காக கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி. கிறிஸ்தவ அமைப்பினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளை முடக்க முயற்சி. ஒன்றிய அரசு சட்டத்திருத்தத்தால் எவ்வித காரணமுமின்றி சிறுபான்மையின நிறுவனங்களை முடக்க முடியும் என்று சிறுபான்மையினருக்கு எதிரான FCRA சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி வில்சன் விளக்கம் அளித்துள்ளார்.

75 ஆண்டுகளாக கல்வியை பரப்பியதில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. மத சுதந்திரத்துக்கு எதிராக மோடி அரசு சட்டத் திருத்தத்தை கொண்டு வருகிறது. சிறுபான்மையினர் நடத்தும் நிறுவனங்களால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பது அபத்தமானது. சிறுபான்மையின அமைப்புகளுக்கு நிதி வழங்குவோரை அச்சுறுத்தும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி, மருத்துவமனை, ஆதரவற்றோர் இல்லங்களால் ஏழைகள், பட்டியல், பழங்குடியினர் பயன்பெறுகின்றனர்.

இதுவரை 2000க்கும் மேற்பட்ட சிறுபான்மையின நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சிறுபான்மையினருக்கு எதிராக திட்டமிட்டு தாக்குதல் நடத்துகிறது மோடி அரசு. கொடூரமான FCRA சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். இன்று நிறுவன சொத்துகளை எடுக்கும் மோடி அரசு நாளை அனைத்து கிறிஸ்தவர்களின் சொத்துகளையும் எடுக்கும் ஆபத்து. கிறிஸ்தவ நிறுவனங்களின் சொத்துக்களை எடுத்து யாருக்கு வேண்டுமானாலும் மாற்றி அளிப்பார்களாம். என்று கூறியுள்ளார்.

 

Related Stories: