தமிழ்நாடு பாஜக மையக் குழு உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி சென்னையில் ஆலோசனை..!

சென்னை: தமிழ்நாடு பாஜக மையக் குழு உறுப்பினர்கள் 18 பேருடன் பிரதமர் மோடி சென்னையில் ஆலோசனை மேற்கொள்கொண்டுள்ளார். வேட்பாளர்கள் பட்டியல் நேற்று அறிவித்த நிலையில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

புதுச்​சேரி​யில், தேசிய ஜனநாயகக் கூட்​டணி வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாகப் பிரச்​சா​ரம் செய்ய பிரதமர் நரேந்​திர மோடி நேற்று டெல்​லி​யில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்​தார். அங்​கிருந்து ஹெலி​காப்​டர் மூலம் புதுச்​சேரி சென்ற அவர், அங்கு நடை​பெற்ற பிரம்​மாண்ட ரோடு ஷோவில் பங்​கேற்​றார். பிரச்​சா​ரத்தை முடித்​துக்​கொண்டு நேற்​றிரவு மீண்​டும் சென்னை திரும்​பிய அவரை, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய அமைச்​சர்​கள் பியூஸ் கோயல், எல்​.​முரு​கன் உள்​ளிட்ட முக்​கிய தலை​வர்​கள் வரவேற்​றனர்.

விமான நிலை​யத்​தில் இருந்து கார் மூலம் கிண்​டி​யில் உள்ள நட்​சத்​திர விடு​திக்​குச் சென்ற பிரதமர் மோடி, கட்​சி​யின் முக்​கிய நிர்​வாகி​களை சந்தித்தார். இதனை தொடர்ந்து இன்று காலை தமிழ்நாடு பாஜக மையக் குழு உறுப்பினர்கள் 18 பேருடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த தேர்தலில் பாஜகவினுடைய வியூகம் எப்படி இருக்க வேண்டும்,தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

Related Stories: