பிரதமர் மோடி இன்று ரோடுஷோ: புதுச்சேரியில் தலைவர்கள் அனல்பறக்கும் பிரசாரம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வருகிற 9ம்தேதி நடக்கிறது. பிரசாரம் 7ம்தேதியுடன் ஓய்கின்ற நிலையில், அரசியல் தலைவர்களின் அடுத்தடுத்த படையெடுப்பால் தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. இதனிடையே தேஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இன்று மாலை பிரதமர் மோடி புதுச்சேரி வருகிறார். 4 மணியளவில் அஜந்தா சிக்னலில் இருந்து ராஜா தியேட்டர் சிக்னல் வரையிலான ரோடு ேஷாவில் அவர் பங்கேற்கிறார்.

பிரதமரை தொடர்ந்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 6ம்தேதியும், பாஜ தேசிய தலைவர் நிதின் நிபின் 5ம்தேதியும் புதுச்சேரி வருகின்றனர். இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 6ம்தேதி தட்டாஞ்சாவடியில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ஆதரவு திரட்டுகிறார்.

Related Stories: