சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அமமுக நிர்வாகி பார்த்திபன்

 

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அமமுக நிர்வாகி பார்த்திபன். சோளிங்கர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும் அமமுக நிர்வாகியுமான பார்த்திபன் திமுகவில் இணைந்தார். 2016ல் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பார்த்திபன், பின்னர் அமமுகவில் இணைந்தார். அமமுக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராகவும் மண்டல பொறுப்பாளராகவும் பதவி வகித்தார் பார்த்திபன். கடந்த ஆண்டு சோளிங்கரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமமுக வேட்பாளர் பார்த்திபன் என்று அறிவித்திருந்தார் டிடிவி தினகரன். கூட்டணியில் 11 இடங்கள் கிடைத்தும் தனக்கு அமமுகவில் சீட் ஒதுக்கப்படவில்லை என பார்த்திபன் அதிருப்தி. அமமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் அதிருப்தியில் இருந்த பார்த்திபன் கட்சியில் இருந்து விலகினார்

Related Stories: