திட்டமிட்டு அலைக்கழிக்கும் காவல்துறை… சுற்று வழியில் தஞ்சைக்கு அழைத்து செல்லப்படும் உதயநிதி… நள்ளிரவு வரை விசாரிக்க திட்டம்.!!

தஞ்சை: 9 பிரிவுகளின் கீழ் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறும் காவல்துறை, அவரை விசாரிக்க சென்னையில் இருந்து தஞ்சை தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் திருச்சி வழியாக தஞ்சை அழைத்து செல்லப்பட்டு வருகிறார். விசாரணைக்கு பின் இன்றே விடுவிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், இது திட்டமிட்ட அலைக்கழிப்பு என்று திமுக-வினர் குற்றம்சாட்டி உள்ளனர். அரியலூர் வழியாக சென்றாலே 1 மணி நேரத்தில் தஞ்சையை அடைந்து விட முடியும்.

ஆனால் காவல்துறையினரோ திருச்சி வழியாக உதயநிதி ஸ்டாலினை தஞ்சைக்கு அழைத்து சென்று கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் கிட்டத்தட்ட 3 மணிநேரம் காலம் கடத்த காவல்துறையினர் வேண்டுமென்றே திட்டமிட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஒன்றரை மணி நேர பயணத்தை சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலானதாக மாற்றியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாளை பேரவை கூட உள்ள நிலையில், நள்ளிரவு வரை விசாரணையை நீட்டிக்கவே இந்த திட்டமிட காலதாமதத்தை தவெக அரசின் காவல்துறை செய்வதாக திமுக தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories: