சென்னை: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று தஞ்சையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவிரி விவகாரம் உட்பட தவெக அரசு அலட்சியம் காட்டும் பல மக்கள் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்புவோம், சும்மா விட மாட்டோம் என்று உதயநிதி நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் எதிர்கட்சி தலைவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவரை கைது செய்ய வீட்டினுள் சென்றுள்ள காவல்துறையினர், முதலில் என்ன வழக்கு, புகார் தாரர் யார் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் எதையுமே தெரிவிக்காமல் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய முயற்சித்தாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தவெக தஞ்சை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி என்பவர் அளித்த புகாரின் பேரில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது.
