பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

தொண்டி, பிப்.19:  தொண்டி அருகே உள்ள நம்புதாளை அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஜான்தாமஸ் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி பாரதி முன்னிலை வகித்தார். இதில் பழைய கட்டித்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட ஒன்றிய தலைவரிடம் முறையிடுவது, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையின் மூலம் கட்டப்படும் கட்டிடத்தை மார்ச் 31ம் தேதி முடிப்பது உள்ளிட்ட தீர்மானம்

நிறைவேற்றப்பட்டது. பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: