திண்டுக்கல்: வேட்புமனு தாக்கலுக்கு நல்ல நாள் பார்க்க ஜோசியரைப் பிடித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். திண்டுக்கல்லில் அவர் அளித்தபேட்டி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தபடி அதிமுக, இந்திய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திண்டுக்கல் தொகுதி வேட்பாளராக நிற்கிறேன். தொகுதி மக்கள் தங்களின் அன்பால் மீண்டும் என்னை தேர்ந்தெடுப்பார்கள்.
அதிமுக தேர்தல் அறிக்கை மக்களிடம் சென்றடைந்துள்ளது. குடும்பத்தலைவிகளுக்கு ரூ.10 ஆயிரம், அரிசி கார்டுகளுக்கு ரூ.2 ஆயிரம், கல்விக்கடன் ரத்து என எடப்பாடி பழனிசாமி கூறியவை எல்லாம் செய்வார். என்னை எதிர்த்து நிற்பவர்களைப் பற்றி கவலை இல்லை. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஜோசியரை பிடித்துள்ளேன். வேட்புமனு தாக்கல் ரகசியமாக செய்ய முடியாது. நல்ல நாள் பார்த்து வேட்பு மனு செய்ய வேண்டும்.
