விஜய்க்கு மொத்தம் ரூ.520 கோடியில் சொத்துகள் உள்ளதாக வேட்புமனுவில் தகவல்

 

சென்னை: விஜய்யிடம் ரூ.404 கோடியில் அசையும் சொத்துகள் உள்ளதாக பெரம்பூர் தொகுதியில் விஜய் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. ரூ.213.36 கோடியை சாலிகிராம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் விஜய் சேமிப்புக் கணக்கில் வைத்துள்ளார். இந்திரா நகர் ஆக்சிஸ் வங்கி கிளையில் ரூ.40 கோடியை நிலையான வைப்பு தொகையாக வைத்துள்ளார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கோடம்பாக்கம் கிளையில் ரூ.25 கோடியை சேமிப்புத் தொகையாக விஜய் வைத்துள்ளார்.

ஹெச்.டி.எஃப்.சி பெசன்ட் நகர் கிளையில் ரூ.20 கோடியை நிலையான வைப்புத் தொகையாக வைத்துள்ளார். சாஸ்திரி நகர் ஸ்டேட் வங்கி கிளையில் ரூ.15 கோடியை நிலையான வைப்புத் தொகையாக வைத்துள்ளார். விஜய் ரூ.370 கோடிக்கு மேல் சேமிப்புகளாக மட்டும் பல்வேறு வங்கிகளில் வைப்பு வைத்துள்ளார்

பட்டப் படிப்பை பாதியில் நிறுத்தியதாக வேட்புமனுவில் விஜய் தகவல். லயோலா கல்லூரியில் பி.எஸ்சி படிப்பை முடிக்காமல் பாதியில் கைவிட்டுள்ளார் விஜய். 2020-21ல் ரூ.8.04 வருமானம் என வருமானவரித்துறையில் விஜய் கணக்கு சமர்ப்பித்தார். 2021-22ல் ரூ.237.46 கோடியும் 2022-23ல் ரூ.198.71கோடியும் வருமானம் இருந்ததாக விஜய் குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுதோறும் வருமானவரித்துறைக்கு விஜய் காட்டிய வருமான கணக்கு விவரம் வேட்புமனுவில் சமர்ப்பித்துள்ளார்.

விஜய் மனைவி பெயரில் ரூ.15.51 கோடிக்கு அசையும் சொத்துகள் உள்ளன. விஜய் மனைவி பெயரில் ரூ.2.53 கோடி அசையா சொத்துகள் உள்ளன. விஜய் மனைவிக்கு சொந்த கார் கூட இல்லை என வேட்புமனுவில் தகவல். 4 ஆண்டுகளாக விஜய்யின் மனைவிக்கு எந்த வருமானமும் இல்லை என வேட்புமனுவில் தகவல். 2020 – 21ம் ஆண்டில் விஜய் மனைவிக்கு ரூ.6.13 லட்சம் வருமானம் என அவரது வேட்புமனுவில் தகவல். 2021-22, 2022-23, 2023-24, 2024-25 ஆகிய 4 நிதியாண்டுகளில் தனது மனைவிக்கு எந்த வருமானமும் இல்லை என விஜய் தகவல்

தனது கையில் ரொக்கம் ரூ.2 லட்சம் உள்ளதாக வேட்புமனுவில் விஜய் தகவல். ரூ.1.20 கோடி மதிப்புள்ள 883 கிராம் தங்கம், ரூ.15 லட்சத்துக்கு வெள்ளி பொருட்கள் விஜய் வசம் உள்ளன. 2025 5.67,400 மதிப்பிலான டி.வி.எஸ். எக்ஸ்.எல். சூப்பர் மொபட் வாங்கியதாக வேட்புமனுவில் விஜய் தகவல்.

தனது மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா ஷாஷாவுக்கு கார் எதுவும் இல்லை. விஜய் மனைவி வசம் ரூ.1 கோடி மதிப்புள்ள 134.19 கேரட் வைரம், 3 கிலோ தங்கம் உள்ளது. 33,955 சதுர அடியில் சென்னை போரூரில் விஜய்க்கு வீட்டு மனை உள்ளது. 9,600 சதுர அடியில் நீலாங்கரையில் வீட்டுமனை உள்ளதாக வேட்புமனுவில் விஜய் தகவல். திருவள்ளூர் மாவட்டம் கொப்பூரில் 1 லட்சம் சதுர அடியில் விஜய்க்கு வணிகக் கட்டடம் உள்ளது. அனைத்து அசையா சொத்துகளையும் தனது பெயரிலேயே விஜய் வாங்கி குவித்துள்ளார்.

தனது மனைவி சங்கீதா தன்னிடம் ரூ.12 கோடி கடன் வாங்கியுள்ளதாக விஜய் வேட்புமனுவில் தகவல். தனது மகள் தன்னிடம் ரூ.4.60 லட்சம் கடன் வாங்கியுள்ளதாகவும் விஜய் வேட்புமனுவில் தகவல். தனது மகன் ஜேசன் சஞ்சய் ரூ.8.78 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும் விஜய் வேட்புமனுவில் தகவல். தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா சந்திரசேகர் தன்னிடம் கடன் வாங்கியுள்ளனர்

Related Stories: