*உற்சாகத்துடன் படிக்கும் மாணவிகள்
குளித்தலை : குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 105.90 லட்சம் மதிப்பீட்டில் 5 வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது.கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுற்று வட்டாரத்திலிருந்து 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தமிழ் வழி கல்வி ஆங்கில வழிக் கல்வி பிரிவுகள் உள்ளது.
அதனால் கல்வியின் தரம் உயர்ந்தும் தமிழக அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கும் அரசு சலுகைகளை உணர்ந்தும் கிராமப்புற மாணவிகள் 5ம் வகுப்பு முடிந்து 6ம் வகுப்பிலும் நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு முடித்து 9ம் வகுப்பிலும் உயர்நிலைப் பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை முடித்து 11ம் வகுப்பு 12ம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.
மேலும் இப்பள்ளி மாணவிகள் பள்ளி விழாவிற்கு வருகை தந்த எம்எல்ஏ மாணிக்கத்திடம் எங்கள் பள்ளிக்கு கூடுதல் 5 வகுப்பறையில் கொண்ட புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
கோரிக்கை ஏற்ற எம்எல்ஏ மாணிக்கம், கரூர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி வழிகாட்டுதலின்படி முதலமைச்சருக்கு எடுத்துக்கூறி பள்ளி கல்வித்துறை சார்பில் ரூ 1 கோடியே 5 லட்சத்து 99 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டத்து. தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக பள்ளிக்கட்டிடத்தை திறந்து வைத்தார். இதனால் அரசு பள்ளி மாணவிகள் இது குறித்து கூறியதாவது:
எங்கள் பள்ளி கரூர் மாவட்டத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக சிறப்பாக நடைபெற்று வருகிறது மேலும் ஒவ்வொரு ஆண்டும் இப்பள்ளியில் கூடுதல் மதிப்பெண்களை பொது தேர்வில் வெற்றி வருகிறோம். தேர்ச்சி சதவீதமும் வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருவதற்கு முழுமையாக கல்வியில் ஈடுபட்டு வருகிறோம்.
மேலும் தமிழக அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு வழங்கும் பல்வேறு உதவிகள் கிடைக்கப்பெற்றதால் அனைத்து மாணவிகளும் உற்சாகத்துடன் அரசு பள்ளியில் சேர்ந்து கல்வி பயிலும் நிலைக்கு வந்துள்ளோம்.
இதனால் எங்களுக்கு எதிர்கால வாழ்வுக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து வருகிறது ஆகவே முன்னோடி பள்ளியாக 2500 மாணவிகளுக்கு மேல் கல்வி வெயிலும் இப்பள்ளிக்கு கோரிக்கையை ஏற்றவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ரூ ஒரு கோடியே 9 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் கூடுதல் ஐந்து வகுப்பறைகள் கட்டி முடித்து அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காணொளி வாயிலாக திறந்துவைத்தமைக்கு தமிழ்நாடு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
