×

சிவகாசியில் 37 இடங்களில் பிரசாரம் செய்ய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி

 

சிவகாசி, மார்ச் 29: சிவகாசி போலீஸ் உட்கோட்டத்தில் 37 இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய அரசியல் கட்சிகளுக்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப். 23ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. சிவகாசி உட்கோட்ட பகுதியில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் செய்ய 37 இடங்களில் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

அதன்படி சிவகாசி பாவடிதோப்பு, சாட்சியாபுரம் பஸ் ஸ்டாப், விஸ்வநத்தம் புதூர், மாரனேரி பஸ் ஸ்டாப், அம்பலார்மடம், சிவகாசி தேவர் சிலை, திருத்தங்கல் குறுக்குப்பாதை தனியார் மைதானம், திருத்தங்கல் கார்த்திக் ஓட்டல் முன்பு, திருத்தங்கல் பெரியார் சிலை, எம்.புதுப்பட்டி காளியம்மன் கோயில் திடல், எரிச்சநத்தம் மந்தை ஆகிய 11 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
மேலும் சாட்சியாபுரம் பஸ் ஸ்டாப், சிவகாசி காமராஜர் சிலை, சித்துராஜபுரம் பஸ் ஸ்டாப், விஸ்வநத்தம் நடுவூர் பஸ் ஸ்டாப், சித்துராஜபுரம் மேலூர், சிவகாசி மணி நகர்,

வெம்பக்கோட்டை முக்கு, சிவகாசி பஸ் ஸ்டாண்டு, நாரணாபுரம், மீனம்பட்டி, பள்ளபட்டி, அம்பலார்மடம், காரனேசன் முக்கு, திருத்தங்கல் குறுக்குப்பாதை, மேலும் எஸ்.என்.புரம் பிள்ளையார் கோயில், திருத்தங்கல் அம்பேத்கர் சிலை உட்பட 16 பகுதிகளில் தெருமுனை பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 10 இடங்களில் வேன் பிரச்சாரத்திற்கும் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரசாரம் செய்ய போலீசாரிடம் அரசியல் கட்சிகள் முன் அனுமதி பெற வேண்டும். பல்வேறு கட்சிகள் ஒரே இடத்தில் அனுமதி கேட்டால், யார் முதலில் கேட்டுள்ளனரோ அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

 

Tags : Sivakasi ,Tamil Nadu Assembly Elections ,Presidential Election Commission ,
× RELATED மது பாட்டில்கள் பறிமுதல்