×

மது பாட்டில்கள் பறிமுதல்

ராஜபாளையம் மார்ச் 28:டாஸ்மாக் மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் இலக்கிய முத்து போலீசாருடன் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் மலையடிப்பட்டி பகுதியில் மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த சிவலிங்காபுரம் பகுதியை சேர்ந்த வீரமணி(36) என்பவரை பிடித்து அவரிடமிருந்த சுமார் 53 மது பாட்டில்கள் கைப்பற்றினர். மேலும் ரயில் நிலையம் அருகே கூரைப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த காளிமுத்து(67) என்பவரை பிடித்து அவரிடமிருந்த 131 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்தனர்.

 

Tags : Rajapalayam ,Rajapaliam South Police Station ,Inspector ,Rajesh ,Pro-Inspector Literary Pearl Police ,Tasmak ,
× RELATED ரூ.11.35 லட்சம் அபேஸ் 3 பேர் மீது வழக்கு