- அணிவகுப்பு
- திருச்சி
- நாரிகுடி யூனியன் அலுவலகம்
- கிராம அபிவிருத்தி திணைக்களம்
- பஞ்சாயத்து துறை
- பெண்கள் திட்டம்
திருச்சுழி, மார்ச் 29: நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற்றது. நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித்துறை, மகளிர் திட்டம் ஆகியவற்றின் சார்பில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்குநர் இலக்குவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தில், என் வாக்கு என் உரிமை, என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பது போன்ற பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நரிக்குடி பேருந்து நிலையம், கடை வீதி உள்பட முக்கிய வீதிகளில் கலை நிகழ்ச்சிகளுடன் சென்றனர். நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினர். பேருந்துகள், வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவு உறுதிமொழி, கையெழுத்து இயக்கம் ஆகியவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மகளிர் உதவி திட்ட அலுவலர் பொன்னுக்குமார், நரிக்குடி வட்டார வாழ்வாதார இயக்க மேலாளர் சோணைமுத்து மற்றும் ஊராட்சி செயலர்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் பணியாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
