குளித்தலையில் தேர்தல் மண்டல் அலுவலர்களுக்கு பயிற்சி

குளித்தலை, மார்ச் 27: குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டல அலுவலர்கள் உதவி அலுவலர்களுக்கான வாக்குப்பதிவு தினத்தில் செய்ய வேண்டிய செயல்பாடுகள் குறித்த பயிற்சியளிக்கப்பட்டது. குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டல அலுவலர்களுக்கும் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கும் வாக்குப்பதிவுக்கு முன்பாகவும் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி தலைமை அதிகாரி செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இன்று பயிற்சி வழங்குவது குறித்து குளித்தலை சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலர் மற்றும் சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ தலைமையில் பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சி போது சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்டாட்சியர் உடன் இருந்தனர்.

 

Related Stories: