×

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவர்கள் விழிப்புணர்வு

விகேபுரம்,மார்ச் 29: விகேபுரம் நகராட்சி சார்பில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையர் மகாதேவன் தலைமை வகித்தார். சுயநிதி கல்லூரி நிர்வாக அதிகாரி மதுரை வீரன் முன்னிலை வகித்தார். நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவர்கள், நகராட்சி ஊழியர்கள் உள்பட 100% வாக்களிப்பதை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக விகேபுரத்தில் உள்ள பிஎல்டபிள்யுஎ பள்ளி, புனித மரியன்னை பள்ளி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளிலும் மாணவர்கள் 100% வாக்களிப்பு வலியுறுத்தி உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் நகராட்சி பொறியாளர் முகமது அரிப், பணி மேற்பார்வையாளர் கோமதிநாயகம், நகரமைப்பு ஆய்வாளர் யுவராஜ், நகராட்சி ஆய்வாளர் இசக்கியப்பன், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Vikepuram ,Papanasam Thiruvalluvar College ,Vikepuram Municipality ,Municipal Commissioner ,Mahadevan ,Madurai Veeran ,
× RELATED மது பாட்டில்கள் பறிமுதல்