×

வடமாநில தொழிலாளர் பரிதாப பலி

தூத்துக்குடி, மார்ச் 29: தூத்துக்குடி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தில் தனியார் நிறுவனம் மூலம் காற்றாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. காற்றாலைக்கான கோபுரம் அமைக்கும் பணியில் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜவகர் மகன் தான்சிங் தாக்கூர் (32) என்பவர் ஈடுபட்டு வந்தார். கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இவர் கோபுர பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார். அப்போது கோபுர நிர்மான பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கையிலிருந்த இரும்பு டூல்ஸ் தவறி கீழே நின்று கொன்டிருந்த தான்சிங் தாக்கூர் தலையில் விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் விரைவாக அவரை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Northern State ,Thoothukudi ,Sokkalingapuram ,Tansingh Thakur ,Madhya Pradesh ,
× RELATED மது பாட்டில்கள் பறிமுதல்