- அகில இந்திய ஹாக்கி போட்டி
- விஓசி துறைமுகக் குழு
- தூத்துக்குடி
- தூத்துக்குடி விஓசி துறைமுகக் குழு
- 47 வது
- அகில இந்திய முக்கிய துறைமுகங்கள் ஹாக்கி போட்டி
- கொல்கத்தா
- சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுக ஆணையம்
தூத்துக்குடி,மார்ச் 29:கொல்கத்தாவில் நடந்த அகில இந்திய முக்கியத் துறைமுகங்களுக்கு இடையிலான 47வது ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுக அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கொல்கத்தாவிலுள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுக ஆணையத்தின் சார்பில், கடந்த 24.3.2026 முதல் 27.3.2026 வரை அகில இந்திய முக்கியத் துறைமுகங்களுக்கு இடையேயான 47வது ஹாக்கி போட்டிகள் நடந்தன. இதில் தேசிய அளவில் தகுதி பெற்ற சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுக ஆணையம் (கொல்கத்தா), வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் (தூத்துக்குடி), சென்னை துறைமுக ஆணையம், மும்பை துறைமுக ஆணையம், விசாகப்பட்டினம் துறைமுக ஆணையம், பாரதீப் துறைமுக ஆணையம் ஆறு முக்கியத் துறைமுக அணிகள் பங்கேற்றன. தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில், வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையமும், கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுக ஆணையமும் மோதின. இதில் வ.உ.சிதம்பரனார் துறைமுக அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
