×

கீழராமசாமியாபுரம் பள்ளி மாணவன் சாதனை

தூத்துக்குடி, மார்ச் 29: தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற வட்டார அளவிலான ‘விளையும் பயிர்’ தனிநபர் விளையாட்டு போட்டிகள், கடந்த 10ம் தேதி மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 7ம் வகுப்பு மாணவன் ஜேக்கப் இளவரசன், குண்டு எறிதல் போட்டியில் 3ம் இடம்பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். மாணவரை தாளாளர் ஜோசப் இசிதோர், தலைமை ஆசிரியர் ஸ்டாலின், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

தூத்துக்குடியில் பைக் விபத்தில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி ஸ்பிக்நகர், மார்ச் 29: தூத்துக்குடி அத்திமரப்பட்டி சண்முகபுரத்தை சேர்ந்தவர் முருகன் மகன் மனோஜ்குமார் (32). இவருக்கு அகிலா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மனோஜ்குமார் தூத்துக்குடி என்டிபிஎல் அனல் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இரவு பணி முடிந்து தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி துறைமுக சாலையில், சுனாமி காலனி ரயில்வே கேட் அருகே வந்தபோது, எதிரே வந்த மற்றொரு பைக் அவரது பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மனோஜ்குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். எதிரே வந்த பைக்கில் வந்த பழையகாயல் அருந்ததியர் தெருவை சேர்ந்த வேல்முருகன் மகன் கவிஸ்கர் (20), மற்றும் அவரது நண்பர் ஹேமந்த் (21) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவலறிந்த தெர்மல் நகர் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த மனோஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Keelaramasamyapuram ,Thoothukudi ,Vilayum Fasal ,Tamil Nadu government ,Ambrose Higher Secondary School ,Mengnanapuram ,St. Anna's High School ,Keelaramasamyapuram… ,
× RELATED மது பாட்டில்கள் பறிமுதல்