- நாகர்கோவில்
- கோதார்
- எஸ்ஐ
- சதீஷ் நாராயணன்
- ஊட்டு வாழமடம் சுரங்கப்பாதை
- இயேசு எட்வர்ட் கென்னடி
- ராஜகிருஷ்ணபுரம்
- திருநெல்வேலி மாவட்டம்
நாகர்கோவில், மார்ச் 29: நாகர்கோவில் கோட்டார் எஸ்.ஐ. சதீஷ் நாராயணன் தலைமையில் ஊட்டுவாழ்மடம் சுரங்கப்பாதை அருகே போலீசார் வாகன தணிக்கையில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த திருநெல்வேலி மாவட்டம் ரஜகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஜேசு எட்வர்ட் கென்னடி (51) என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது அவரது பையில் பல்வேறு ரகங்கள் கொண்ட 26 மதுபாட்டில்கள் இருந்தன. இவற்றை திருட்டுத்தனமாக விற்பனைக்கு ெகாண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.3900ம் கைப்பற்றப்பட்டது. பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர். ஜேசு எட்வர்ட் கென்னடி தற்போது இடலாக்குடி வேத நகர் பகுதியில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
