×

தங்கமயில் ஜூவல்லரியில் வருடாந்திர சிறப்பு விற்பனை கொண்டாட்டம்

மதுரை, மார்ச் 29 : மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தங்கமயில் ஜூவல்லரி நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் 66 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. 35 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களையும், 3,500க்கும் மேற்பட்ட பணியாளர்களையும் கொண்டுள்ளது. தங்களது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் விதமாக ‘வருடாந்திர சிறப்பு விற்பனை’ சலுகைகளை தங்கமயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் வாங்கும் தங்க செயின்களுக்கு சேதாரம் 3 சதவீதம், மாலை, நெக்லஸ் மற்றும் வளையல்களுக்கு சேதாரம் 6 சதவீதம், ஆன்ட்டிக் கலெக்சன்கள், ஜோ கலெக்சன்கள், நயா கலெக்சன்கள், மோதிரம் மற்றும் தோடுகள் என அனைத்திற்கும் சேதாரம் 9 சதவீதம் மட்டுமே. 7 காரட்டிற்கு மேல் பெல்ஜியம் கட் வைர நகைகள் வாங்குபவர்களுக்கு காரட்டிற்கு ரூ.30 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படும். வெள்ளி நகைகள் மற்றும் பரிசு பொருட்களுக்கு 10 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் வெள்ளி கொலுசுகள் மற்றும் வெள்ளி பொருட்களுக்கு செய்கூலி இல்லை. பிளாட்டினம், ரூபி எமரால்டு நகைகளுக்கு சேதாரத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றும், இந்த சலுகைகள் அனைத்தும் மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகின்றன. இது தவிர, சேமிப்புத் திட்டத்தில் இணையும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படும் என தங்கமயில் ஜூவல்லரி நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

Tags : Thangamayil Jewellery ,Madurai ,Tamil Nadu ,
× RELATED மது பாட்டில்கள் பறிமுதல்