புதுச்சேரி, மார்ச் 29: புதுச்சேரி பூமியான்பேட் பகுதியைச் சேர்ந்த ஆண் நபரை, மர்ம நபர் ஒருவர் தொடர்புகொண்டு வங்கி அதிகாரி பேசுவதாக கூறியுள்ளார். இதையடுத்து, மர்ம நபர் இணையதளம் லிங்க் ஒன்றை, மேற்கூறிய நபருக்கு அனுப்பி, அதில் கிரெடிட் கார்டு விவரம் மற்றும் ஓடிபி பதிவு செய்யுமாறு கூறியுள்ளார். இதனை நம்பி மேற்கூறிய நபரும் கார்டு விவரம் மற்றும் ஓடிபி பதிவு செய்து சிறிது நேரத்தில் அவரது கார்டில் இருந்த ரூ.1.19 லட்சத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. மேலும், லாஸ்பேட்டையை சேர்ந்த ஆண் நபரின் வாட்ஸ் அப்பில் செயலி ஒன்று வந்துள்ளது. இதனை அவரது செல்போனில் பதிவிறக்கம் செய்து சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்த ரூ.98 ஆயிரத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. தொடர்ந்து, அரியாங்குப்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் ரூ.4 ஆயிரமும், கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ரூ.8,500 ஆயிரம் மோசடி கும்பலிடம் பணத்தை ஏமாந்துள்ளனர். மேற்கூறிய நபர்கள் மொத்தமாக ரூ.2.29 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர்.
