- விருத்தாச்சலம்
- கலைமணி
- தேர்தல் பறக்கும் படை அதிகாரி
- ராஜேந்திரபட்டினம்
- கருவேபிலங்குறிச்சி
- Jayankondam
- விருத்தாசலம்…
விருத்தாசலம், மார்ச் 25: விருத்தாசலம் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரி கலைமணி தலைமையில் போலீசார் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ராஜேந்திரப்பட்டினத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெயங்கொண்டம் பகுதியில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த மினி டெம்போ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அந்த மினி டெம்போவில் உரிய ஆவணம் இனறி சுமார் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான 32 மூட்டை புகையிலை பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் வாகனத்தை பறிமுதல் செய்து விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
