- எம். தாமிமுன் அன்சாரி
- MJK
- சிதம்பரம்
- எம்.ஜே.கே பொதுச் செயலாளர்
- முஹம்மது நஸர்
- மனிதநேய ஜனநாயகக் கட்சி
- மனிதநேய ஜனநாயகக் கட்சி…
சிதம்பரம், மார்ச் 29: சிதம்பரம் தொகுதியில் மஜக வேட்பாளராக மு.தமிமுன் அன்சாரி போட்டியிடுகிறார். மஜக பொதுச்செயலாளர் முஹம்மது நாசர் வெளியிட்ட அறிவிப்பு: மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதியை கூட்டணியில் ஒதுக்கீடு செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சிதம்பரம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி போட்டியிடுவார் என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை தீவிரமாக பணியாற்றி வெற்றி பெற செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
