×

பாலியல் சீண்டல் முதியவருக்கு 5 ஆண்டு சிறை

புதுச்சேரி, மார்ச் 27: புதுச்சேரி முத்திரையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (எ) ஆனந்தராஜ் (66).. இவர், தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த 2023 ஆகஸ்ட் கடைசி வாரம் நடந்தது. இது குறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அந்தோணிராஜை கைது செய்தனர். இவ்வழக்கு போக்சோ விரைவு நீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கினை நீதிபதி சுமதி விசாரித்து, குற்றவாளி அந்தோணிராஜுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.

Tags : Puducherry ,Anthonyraj (A) Anandaraj ,Mudraiyarpalayam ,
× RELATED ரூ.80 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்