விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

வருசநாடு, பிப். 18: கடமலைக்குண்டு அருகே மயிலாடும்பாறையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் பழ அறிவியல் துறை இணைந்து மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த தோட்டக்கலை பயிர் சாகுபடி குறித்த பயிற்சி நடைபெற்றது. பழ அறிவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். பேராசிரியர் பார்த்திபன், இணை பேராசிரியர் சுபேஸ்ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சியில் விலாம், கொடுக்காப்புளி, நாவல், வில்வம், நெல்லி மற்றும் கொய்யா உள்ளிட்ட மருத்துவ

குணங்கள் உள்ளிட்ட மரங்களை நட்டு பராமரிக்கும் முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.

Related Stories: