நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி நேபாள புதிய பிரதமராக பலேன் இன்று பதவிஏற்பு

காத்மாண்டு: நேபாள நாட்டின் புதிய பிரதமராக பலேந்திர ஷா பலேன் இன்று பதவி ஏற்கிறார். நேபாள நாட்டில் கடந்த மார்ச் 5ஆம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் ராஷ்ட்ரீய ஸ்வதந்திர கட்சியின் மூத்த தலைவரும், 35 வயதான முன்னாள் ராப் பாடகருமான பலேந்திர ஷா பலேன் தலைமையிலான கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 275 இடங்களில் 182 இடங்களைக் கைப்பற்றி அந்த கட்சி வெற்றி பெற்றது. இதன் மூலம் நேபாள அரசியலமைப்பின் 76(1) பிரிவின் கீழ் பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்கான தகுதியை அது பெற்றுள்ளது. பிரதிநிதிகள் சபையின் 275 உறுப்பினர்களில், 165 பேர் நேரடி வாக்கெடுப்பு மூலமாகவும், 110 பேர் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை மூலமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நேற்று நடந்த ராஷ்டிரிய ஸ்வதந்திர கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக பலேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், நேபாளத்தின் மிக இளம் வயது பிரதமராக அவர் பதவி ஏற்க உள்ளார். தற்போது பலேனின் வயது 35 ஆகும். மேலும் நாட்டின் உயரிய நிர்வாகப் பதவியை வகிக்கும் மதேஷ் பிராந்தியத்தைச் சேர்ந்த முதல் நபராகவும் திகழ்வார்.

Related Stories: