லண்டன்: குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி மெகுல் சோக்சி, நீரவ் மோடி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிச்சென்றனர். இதனை தொடர்ந்து இங்கிலாந்தின் லண்டனில் பதுங்கி இருந்த நீரவ் மோடி கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கு இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நீரவ் மோடி லண்டன் உயர்நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார். நீரவ் மோடியின் வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கான அனுமதியை நிராகரித்த நீதிபதிகள் அமர்வு, இந்திய அரசு தனது அதிகாரப்பூர்வ குறிப்பில் வழங்கிய உறுதிமொழிகளின் தரத்தை தாங்கள் நம்பியதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு நாடு கடத்தலுக்கு எதிரான நீரவ்மோடி மனு தள்ளுபடி: லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவு
- நிராவ் மோடி
- இந்தியா
- இலண்டன் உயர்நீதிமன்றம்
- லண்டன்
- குஜராத்
- மெஹுல் சோக்சி
- பஞ்சாப் நேஷனல் வங்கி
- லண்டன், இங்கிலாந்து
