- மார்த்தாண்டம்
- பிரபாகரன்
- மாதவிலகம்
- கண்டன்விளை
- அபினேஷ்
- ரகு
- ரெடீப்
- சதைமங்கலம்
- மார்த்தாண்டம்-நாகர்கோயில் சாலை…
மார்த்தாண்டம், மார்ச் 28: கண்டன்விளை மாடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். அவரது மகன் அபினேஷ் (24). கண்டன்விளை சடையமங்கலம் பகுதியை சேர்ந்த ரகு மகன் ரெதீப் (24). இருவரும் நண்பர்கள். சம்பவத்தன்று இருவரும் பைக்கில் மார்த்தாண்டம்- நாகர்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை அபினேஷ் ஓட்டினார். ரெதீப் பின்னால் அமர்ந்திருந்தார். கல்லுதொட்டி பம்மம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த கேரள மாநில பதிவெண் கொண்ட டாரஸ் லாரி பைக் மீது மோதியது. இதில் பின்னால் வந்த ரெதீஷ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அபினேசுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் மீட்கப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அபினேஷ் அளித்த புகாரின்பேரில் மார்த்தாண்டம் போலீசார் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
