×

மார்த்தாண்டம் அருகே ரப்பர் தோட்டத்தில் தொழிலாளி தற்கொலை

மார்த்தாண்டம், மார்ச் 27: மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி இலஞ்சிவிளை பகுதியை சேர்ந்தவர் அம்புரோஸ். அவரது மகன் ஜெபனிஷ் (45). தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இதனால் தாய் மரியரோஸ் வீட்டி்ல் வசித்து வந்தார். இந்தநிலையில் மது பழக்கத்துக்கு அடிமையான ஜெபனிஷ் மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பேரை பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் ஜெபனிஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மார்த்தாண்டம் போலீசார் ஜெபனிசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அவரது அண்ணன் ஜெகதீஷ் (51) கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Marthandam ,Ambrose ,Ilanchivilai ,Thikurichi ,Maria Rose ,Jebanish ,
× RELATED மது பாட்டில்கள் பறிமுதல்