சென்னை: தவெக தலைவர்விஜய்யின் மனைவி சங்கீதா அவரிடம் இருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதற்கு காரணமாக நடிகை ஒருவரை குறிப்பிட்டிருந்தார். இதனை அடுத்து திருமண நிகழ்ச்சி ஒன்றில் விஜய் நடிகை திரிஷாவுடன் கலந்து கொண்டது பேசுபொருளானது. விஜய்யின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். நடிகர் சமுத்திரக்கனி, ஒரு நிகழ்ச்சியில் தனது நண்பர்களிடம், ‘‘யாரை பழிவாங்க இதை செய்கிறார்? தன்னை சுற்றி ஒரு பிரச்னை நடக்கும்போது நடிகையுடன் நிகழ்ச்சிக்கு வருகிறார்.
நான்கு சுவருக்குள் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் இது. சொந்த கட்சி தொண்டர்களாலேயே இதற்கு முட்டுக்கொடுக்க முடியாது’’ என்று பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. சமுத்திரக்கனியின் இந்த கருத்து விஜய்யை தான் குறிப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் சமுத்திரக்கனியிடம் இது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘‘நான் பேசுவதை வீடியோ எடுக்கிறார்கள் என்று தெரிந்து தான் பேசினேன். பேசிவிட்டு பிறகு வருந்தவும் இல்லை. என் மனதிற்கு பட்டதை பேசினேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
