மனுநீதி நாள் முகாமில் 361 பேர் மனு அளித்தனர்

*தீர்வு காண அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

சித்தூர் : சித்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாமில் 361 பேர் தங்கள் குறைகளை மனுவாக டம் வழங்கினர்.சித்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மனுநீதி நாள் முகாம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று திங்கட்கிழமை என்பதால் கலெக்டர் சுமித் குமார் தலைமையில் மனுநீதினால் முகாம் நடைபெற்றது.

முகாமில் 361 பேர் தங்களின் குறைகளை மனுவாக எழுதி கலெக்டர் சுமித் குமாரிடம் வழங்கினர். ஏராளமான பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, நில ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, இலவச வீட்டு மனை பட்டா கோரியும் மனுக்களை அளித்தனர்.

இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், மனுதாரர்களுக்கு ஓரிரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். அதேபோல் சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது ஓரிரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த மனுநீதினால் முகாமில் மாவட்ட இணை கலெக்டர் ராஜேந்திரன் டிஆர்ஓ மோகன் குமார், ஆர்டிஓ ஸ்ரீநிவாஸ், ஜில்லா பரிஷத் முதன்மைச் செயல் அலுவலர் ரவிக்குமார் நாயுடு உள்பட ஏராளமான மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருப்பதியில் 294 பேர் மனு

திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இணை கலெக்டர் கோவிந்த ராவ் தலைமையில் நடந்த மனுநீதி நாள் முகாமில், வருவாய் துறை -183, ஊரக வறுமை துறை -22, காவல்துறை -16, பஞ்சாயத்து ராஜ் -14, நகராட்சி நிர்வாகம் -8, குடிமைப் பொருள் வழங்கல் -7, நில அளவை -6, வேளாண்மைத் துறை -4, நீர்வளத் துறை -4, பஞ்சாயத்து ராஜ் பொறியியல் -4, பொது சுகாதாரம் -4, பள்ளிக் கல்வி -2, குடிமைப் பொருள் வழங்கல் கழகம் -2,

வனத்துறை -2, வீட்டுவசதி கழகம் -2, ஊரக குடிநீர் வழங்கல் -1, பிற்படுத்தப்பட்டோர் நலன் -1, கலால் வரி -1, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி -1, இரண்டாம் நிலை சுகாதாரம் -1, நிலத்தடி சுரங்கத் துறை -1, பதிவுத் துறை -1, ஊரக வளர்ச்சி -1, குருகுலப் பள்ளித் துறை -1, பட்டா கட்டுமான உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் -1, திறன் மேம்பாட்டுக் கழகம் -1, மின்சாரத் துறை -1, சுவர்ணா கிராமம் பிரிவு-1 மற்றும் விரிவான தண்டனை-1 உள்ளிட்ட 294 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

Related Stories: