திமுக தகவல் தொழில்நுட்ப அணி தென்மண்டல ஆலோசனை கூட்டம்

காரைக்குடி, பிப்.16:  காரைக்குடியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் தென்மண்டல ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில துணை செயலாளர், தென்மண்டல பொறுப்பாளர் இலக்குவன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் கேஆர்.பெரியகருப்பன் துவக்கி வைத்து பேசினார். தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏ தலைமை வகித்து பேசினார்.

முன்னாள் எம்எல்ஏ சுப.துரைராஜ், தொழிலதிபர் படிக்காசு, துணைச்செயலாளர் சேங்கைமாறன், முன்னாள் எம்எல்ஏ மதியரசன், நகரசெயலாளர் குணசேகரன், சட்ட பாதுகாப்பு குழு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் செட்டிநாடுபாலு, ஒன்றிய துணை செயலாளர் சொக்கலிங்கம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் சசிவர்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட அமைப்பாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Related Stories: