தை அமாவாசையையொட்டி சமயபுரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

மண்ணச்சநல்லூர், பிப்.12: தை அமாவாசை தினத்தை முன்னிட்டு நேற்று சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழிபாடு செய்தனர். சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன் கோயில். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல ஊர்களில் இருந்து கால்நடையாகவும், வாகனங்களில் வந்தும் வழிபட்டு செல்வார்கள். நேற்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு சமயபுரம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தர். குறிப்பாக பெண் பக்தர்கள் மஞ்சள் மற்றும் சிகப்பு ஆடைகள் அணிந்து பால்குடம் சுமந்தும், அலகு குத்தியும் கால்நடையாக வந்தும் அம்மனை வழிபட்டு சென்றனர். முசிறி: முசிறி பரிசல் துறை ரோடு மற்றும் அக்கிரஹாரத்தில் அமைந்துள்ள காவிரி ஆற்றில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னோர்களுக்கு வேதவிற்பன்னர் மூலம் தர்ப்பணம் கொடுத்தனர். முன்னதாக காவிரி ஆற்றில் புனித நீராடிய பொதுமக்கள் அங்குள்ள விநாயகர் மற்றும் அழகுநாச்சியம்மன் கோயிலில் வழிபாடு செய்தனர்.

Related Stories: