×

100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி

 

விராலிமலை, மார்ச் 17: புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் விராலிமலையில் வருவாய்த்துறை சார்பில் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்தான வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. விராலிமலையில் தொடங்கிய பேரணி இலுப்பூரில் நிறைவடைந்தது.
தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகளில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விராலிமலை வட்டாட்சியர் அலுவலகம் அருகே தொடங்கிய இருசக்கர வாகன வாக்காளர் விழிப்புணர்வு பேரணியானது விராலிமலை கடைவீதி, செக்போஸ்ட், மலைக்குடிபட்டி வழியாக இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

 

Tags : Viralimalai ,Pudukkottai district administration ,Revenue Department ,Iluppur ,Tamil Nadu Legislative Assembly… ,
× RELATED திமுக பிரமுகர் மகன் உயிரிழப்பு