×

திண்டுக்கல் அருகே வீடு புகுந்து நகை பறித்த வழக்கில் மேலும் இருவர் கைது

 

திண்டுக்கல், மார்ச் 17: திண்டுக்கல் அருகே வீடு புகுந்து நகை, பணம் பறித்த வழக்கில் மேலும் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் அரசமர வீதி பகுதியில் வசிப்பவர் செந்தில். கொத்தனார். கடந்த பிப்ரவரி மாதம் இவரது வீட்டில் புகுந்த மர்ம கும்பல், அங்கிருந்த 2 பெண்களை துன்புறுத்தி நகை, பணத்தை பறித்து சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில் டிஎஸ்பி கார்த்திக் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

Tags : Dindigul ,Senthil ,Arasamara Road ,
× RELATED திமுக பிரமுகர் மகன் உயிரிழப்பு