×

நத்தம் அருகே வேன் மீது டூவீலர் மோதி வாலிபர் பலி

 

நத்தம், மார்ச் 17: நத்தம் அருகே விளாம்பட்டியை சேர்ந்தவர் பொன் திருப்பதி (26). இவர் தற்போது நத்தம் மீனாட்சிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் கடந்த மார்ச் 11ம் தேதி தனது டூவீலரில் யூனியன் அலுவலகம் அருகே பெட்ரோல் வாங்கி கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அண்ணா நகர் பிரிவு அருகே வந்த போது எவ்வித சைகையும் இல்லாமல் திடீரென திரும்ப முயன்ற மினிவேன் மீது இவரது டூவீலர் மோதியது. இதில் படுகாயமடைந்த பொன் திருப்பதியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பொன் திருப்பதி உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Natham ,Pon Thirupathi ,Vilampatti ,Natham Meenakshipuram ,
× RELATED திமுக பிரமுகர் மகன் உயிரிழப்பு