×

போலீஸ் துணை கமிஷனர் பொறுப்பேற்பு

 

மதுரை, மார்ச் 17: மதுரை மாநகர காவல் துறையில் தலைமை இடத்து துணை கமிஷனராக திவ்யா நேற்று பொறுப்பேற்று கொண்டார். நாமக்கல் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், 2014 ஆண்டு குரூப் 1 தேர்ச்சி பெற்று பதவி உயர்வில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவில் கூடுதல் துணை கமிஷனராகவும், கோவை மாநகர தலைமை இடத்து துணை கமிஷனராகவும் பதவி வகித்துள்ளார். மதுரையில் பொறுப்பேற்றுக்கொண்ட திவ்யாவுக்கு, துணை கமிஷனர்கள் மற்றும் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Madurai ,Divya ,Madurai City Police Department ,Namakkal district ,Coimbatore… ,
× RELATED திமுக பிரமுகர் மகன் உயிரிழப்பு