×

தடுமாறி விழுந்த லோடுமேன் சாவு

 

மதுரை, மார்ச் 17: மதுரை, திலகர்திடல் அன்சாரிநகர் பகுதியை சேர்ந்தவர் அஜ்மல்கான்(36). லோடுமேன் வேலை செய்து வந்தார். இவருக்கும் திண்டுக்கல்லை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவரது மனைவிக்கு மற்றொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு வீட்டில் இருந்து ெவளியேறதாக கூறப்படுகிறது. இந்த வேதனையில் அஜ்மல்கான் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானார். சம்பவத்தன்று மதுபோதையில் வேலையில் ஈடுபட்டிருந்த அவர், நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Madurai ,Ajmal Khan ,Ansari Nagar ,Thilakarthidal, Madurai ,Dindigul ,
× RELATED சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள்...