- புதிய ஆண்டு
- திண்டுக்கல்
- ரம்ஜான்
- பாரதிபுரம், நாகல்நகர்
- நாகல்நகர் ஜும்மா மசூதி
- சாகுல் ஹமீது
- நாகல் நகர்
திண்டுக்கல், மார்ச் 17: திண்டுக்கல்லில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மத நல்லிணைக்கத்தை வலியுறுத்தி நலிவடைந்தவர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நாகல்நகர் பாரதிபுரத்தில் நடைபெற்றது. நாகல் நகர் ஜும்மா பள்ளிவாசல் முன்னாள் நிர்வாகி சாகுல் ஹமீது தலைமை வகித்தார். நாகல்நகர் சந்தை ரோடு அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் வீரபாண்டியன், தொழிலதிபர்கள் நாசர் கான், முகமது நசுரூதீன் முன்னிலை வகித்தனர். புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டீபன், ராமகிருஷ்ணா ஆசிரம தலைவர் சுவாமி நித்யசத்வானந்தா ஆகியோர் 600க்கும் மேற்பட்ட நலிவடைந்தவர்களுக்கு புத்தாடைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் அப்பாஸ், எஸ்டிடியு மாவட்ட தலைவர் அபுதாஹிர், சமூக ஆர்வலர் அப்துல் ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆண்டவர் மாவு மில் நிர்வாகி அப்துல் ரகுமான் நன்றி கூறினார்.
