×

டூவீலர் விபத்தில் இளைஞர் பலி

 

தேவதானப்பட்டி, மார்ச் 17: கொடைக்கானல் வில்பட்டியில் இருந்து காய்கறிகளை ஏற்றி கொண்டு சரக்கு லாரி திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை வில்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (39) என்பவர் ஓட்டி வந்தார். வழியில் கொடைக்கானல் அடிவாரம் தேவதானப்பட்டி காட்ரோடு அருகே உள்ள காமக்காபட்டியில் லாரியை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு டிரைவர் கீழே இறங்கி உள்ளார். அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த காமக்காபட்டியை சேர்ந்த விக்னேஷ் (24) என்பவர் நின்றிருந்த லாரி மீது மோதினார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் டிரைவர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Devadhanapatti ,Vilpatti ,Kodaikanal ,Dindigul ,Manikandan ,Devadhanapatti Ghat ,
× RELATED சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள்...